search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சியில் போலீஸ் குவிப்பு"

    • அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் எதிரொலியாக திருச்சியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்
    • பொதுமக்களின் அச்சம் போக்கும் வகையில் திருச்சியில் இன்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்

    திருச்சி:

    இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை சேர்ப்பதற்காக அக்னிபத் என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலம் பொது மக்கள், வாலிபர்கள் உள்ளிட்ட அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் திருச்சி மாவட்டத்திலும் பல்வேறு அரசியல் கட்சியனரும் இராணுவத்திற்கு தயாராகி வரும் இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக வட மாநிலங்கள் ரெயில்கள் எரிப்பு, வன்முறை என போராட்டம் உச்சம் அடைந்துள்ளது.

    இதேபோல் ரெயில் பயணிகள் பொது மக்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்படாமல் இருக்கும் வகையில் திருச்சி ரெயில்வே ஜங்சன், திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி ராணுவ ஆள் ேசர்ப்பு மையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் சுமார் 110-க்கும் மேற்பட்ட போலீசார் காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் இதுகுறித்து திருச்சி கண்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் கூறுகையில், ெசன்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கல்லூரி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அைனவரும் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மறியலில் ஈடுபட்டு பொது மக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் நடந்து வருகிறார்கள்.

    அது போல் திருச்சியிலும் பொது மக்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் இன்று காலை முதல் போலீசார் மாநகர் முழுவதும் முக்கிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். யாரேனும் போராட்டத்தில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே பொது மக்களும் இன்று காலை வழக்கத்தை விடு் வெளியில் நடமாடுவது கொஞ்சம் குறைவாகவே காணப்படுகிறது. போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையே பொதுமக்களின் அச்சம் போக்கும் வகையில் திருச்சியில் இன்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    ×