search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி மத்திய சிறை முகாம்"

    • கேரளா என்.ஐ.ஏ. அதிகாரியான எஸ்.பி. தர்மராஜ் தலைமையில் ஒரு குழு திருச்சியில் முகாமிட்டுள்ளது.
    • 8 பேர் கொண்ட அந்த குழுவினர் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து அழைத்துச் செல்ல வந்திருப்பதாக தகவல் வெளியானது.

    திருச்சி:

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவ்வப்போது தங்களது தண்டனை காலம் முடிவடைந்து விட்டதாகவும், உடனடியாக விடுதலை செய்து தங்களது நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 

     இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி திருச்சி மத்திய சிறை முகாமில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு வழக்குகள் தொடர்புடையவர்களிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனை நிறைவில் சிலரின் செல்போன்களை அவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் கைப்பற்றி சென்றனர்.

    தற்போது செல்போன்களின் ஆய்வின் அடிப்படையில் மீண்டும் சோதனை நடத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருச்சி வந்துள்ளனர். கேரளா என்.ஐ.ஏ. அதிகாரியான எஸ்.பி. தர்மராஜ் தலைமையில் ஒரு குழு திருச்சியில் முகாமிட்டுள்ளது.

    8 பேர் கொண்ட அந்த குழுவினர் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து அழைத்துச் செல்ல வந்திருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து சிறப்பு முகாமின் தலைவரான கலெக்டர் பிரதீப் குமாரிடம் அந்த அதிகாரிகள் அனுமதியை நாடி உள்ளனர். இதுதொடர்பாக கலெக்டரிடம் கேட்டபோது, என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் வழக்கு விவரங்களை கேட்டிருக்கிறேன். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் திருச்சியில் முகாமிட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    ×