search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திணறும் அடிவார சாலை"

    • அதிகளவில் பக்தர்கள் குவிந்த நிலையில் ரோப்கார் இயங்காததால் மின்இழுவை ரெயில் நிலையத்தில் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
    • கிரிவீதி, பஸ்நிலையம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனியில் காவடி எடுத்துவந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

    இதனால் எப்போதும் கூட்டம் நிறைந்தே காணப்படுகிறது. விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். கடந்த 16-ந்தேதி முதல் ரோப்கார் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் பக்தர்கள் மலைப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்று அதிகளவில் பக்தர்கள் குவிந்த நிலையில் ரோப்கார் இயங்காததால் மின்இழுவை ரெயில் நிலையத்தில் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

    பழனி அடிவார பகுதியில் பங்குனி உத்திரம் மற்றும் அக்னிநட்சத்திர கழுமரம் திருவிழாவின்போது பக்தர்கள் வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள மேற்கூரை அமைக்கப்பட்டது. ஆனால் இதன் பெரும்பகுதியை கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகளும் ஆக்கிரமித்துள்ளனர்.

    இதனால் வாகனங்கள் மட்டுமின்றி பக்தர்கள் நடந்து செல்லவும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுமட்டுமின்றி கிரிவீதி, பஸ்நிலையம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே இதனை அகற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×