search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாயீப் எர்டோகன்"

    துருக்கி அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக அந்நாட்டு அதிபராக அவர் பதவியேற்க உள்ளார். #TurkeyElection #Erdogan
    இஸ்தான்புல் :

    550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த 1-11-2015 அன்று தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் அடுத்தாண்டு வரை இருக்கும் நிலையில், முன்னதாகவே தேர்தலை நடத்த அதிபர் தாயிப் எர்டோகன் முடிவெடுத்தார்.

    துருக்கி நாட்டில் நேற்று அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. அதிபர் தேர்தலில் மொத்தம் 6 பேர் களத்தில் இருந்தாலும், அதிபர் எர்டோகனுக்கும், குடியரசு மக்கள் கட்சியின் மைய இடதுசாரி வேட்பாளரான முஹரம் இன்சுக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவி வந்தது.

    வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 52.5 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இதன்மூலம் எர்டோகன் அந்நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக அவர் பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எர்டோகன், “இந்த வெற்றியின் மூலம் ஜனநாயகத்தை பற்றி துருக்கி உலகத்திற்கு பாடம் எடுத்துள்ளது. அதிபர் ஆட்சிக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செயல்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், பிரதமர் பதவி இல்லாமல் முழுமையான அதிகாரங்களை கொண்ட துருக்கியின் முதல் அதிபராக எர்டோகன் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #TurkeyElection #Erdogan
    ×