search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவறுகள்"

    • மதுபானங்களை வாங்கி குடிப்பது போன்ற செயல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
    • 3 மாணவர்களை கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் குடித்து விட்டு பள்ளிக்கு வருவது, மாலை நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளி சீருடையுடன் டாஸ்மாக்கிற்கு சென்று மதுபானங்களை வாங்கி குடிப்பது போன்ற செயல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக கண்டமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குடித்து விட்டு பள்ளிக்குள் ரகளை செய்தனர். அவர்கள் மீது வழக்கு போன்ற நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

    தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் காமராஜ் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தியது தொடர்பாக சமூக வளைதலங்களில் வீடியோ வைரலாக பரவியது. அந்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படாததால் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்வதாக சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த நிலையில் திருவெண்ணைநல்லூர் அருகே நேற்று நண்பகலில் மதுபானம் குடித்த 4 மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடமும், ஊழியர்களிடமும் ரகளை செய்தனர். அவர்களை கைது செய்யப்பட்டு ஒரு மாணவனை சிறையில் அடைத்த போலீசார், 3 மாணவர்களை கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த 4 மாணவர்களை யும் சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து நீக்க வேண்டும். அவர்கள் செய்த தவறுகளை உணரும் வகையில் தண்டனை வழங்க வேண்டும். இதனைப் பார்க்கும் பிற மாணவர்கள் மது குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே வளர் இளம் தலைமுறையினர் மதுபான பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்க முடியும். மேலும், குடிப்பதால் ஏற்படும் உடல் நலக்கோ ளாறு, சமூக சீர்கேடு போன்ற வைகளை மாண வர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதமான கருத்துக்களை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்வார்களா? என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

    ×