search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தளி எத்தலப்ப நாயக்கர் சிலைகள்"

    • நீண்ட இழுபறிக்கு பின் தளி எத்தலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது
    • பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷமாக உள்ள தளி எத்தலப்ப நாயக்கர் சிலைகள் காண்டூர் கால்வாய் அருகே திறந்த வெளியில் வைக்கப்பட்டு உள்ளது.

    உடுமலை: 

    உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை காண்டூர் கால்வாய் அருகே சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.நீண்ட இழுபறிக்கு பின் தளி எத்தலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    அதைத் தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மணிமண்டபம் மற்றும் உருவச்சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் மணிமண்டபம் கட்டுவதற்கு திருமூர்த்தி நகரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு ஏக்கர் புறம்போக்கு நிலமும் தேர்வு செய்யப்பட்டது.அறிவிப்பு வந்து நீண்ட நாட்கள் ஆகியும் மணிமண்டபம் கட்டும் பணி துவங்கப்படாதது அனைத்து தரப்பினரையும் வேதனை அடைய செய்து உள்ளது.

    அதுமட்டுமின்றி பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷமாக உள்ள தளி எத்தலப்ப நாயக்கர் சிலைகள் காண்டூர் கால்வாய் அருகே திறந்த வெளியில் வைக்கப்பட்டு உள்ளது.எனவே மணிமண்டபம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மற்றும் திறந்த வெளியில் உள்ள பழங்கால சிலைகள் பாதிப்பு அடையாமல் இருக்க மேற்கூரை அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×