search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருண் மஜூம்தார்"

    • 4 தேசிய விருது பெற்ற பிரபல வங்காள மொழி டைரக்டர் தருண் மஜூம்தார் மரணம் அடைந்தார்.
    • 1990-ல் பத்மஸ்ரீ தருண் மஜூம்தார் விருதும் பெற்றார்.

    தருண் மஜூம்தார், tarun majumdarபிரபல வங்காள மொழி இயக்குனர் தருண் மஜூம்தார். இவர் இயக்கத்தில் வெளியான கஞ்சேர் சுவர்கோ, நிமந்த்ரன், ஞானதேவத, ஆரன்ய அமர ஆகிய படங்களுக்காக 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 'பலிகா பது', 'குஹேலி', 'ஸ்ரீமர் பிருத்விராஜ்', 'தாதர் கீர்த்தி' உள்ளிட்ட முக்கியமான பல படங்களை இயக்கியுள்ளார். நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கையை அழுத்தமான கதையம்சங்கள் மூலம் திரையில் கொண்டு வந்தவர் தருண் மஜூம்தார். திரையுலக சாதனைக்காக 1990-ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றார். இவரின் இயக்கத்தில் 2018-ல் கடைசியாக அதிகார் என்ற ஆவண படம் வெளியானது.

    தருண் மஜூம்தார்

    தருண் மஜூம்தார்

    தருண் மஜூம்தாருக்கு சில தினங்களுக்கு முன்பு முதுமை காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு சிறுநீரக பாதிப்பும், இதய நோயும் இருப்பது தெரிய வந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலன் இன்றி தருண் மஜூம்தார் மரணம் அடைந்தார். 92 வயதாகும் தருண் மஜூம்தார் மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    ×