search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அணி"

    • தமிழக அணி 709 புள்ளிகளை குவித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    • பதக்கம் மற்றும் பல சாதனைகளை புரிந்த தமிழக வீரர் , வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.

    சென்னை:

    33-வது தென் மண்டல ஜூனியர் தடகள போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் 3 நாட்களாக நடந்தது. 14,16,18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் நடந்த போட்டியில் தமிழக அணி சார்பில் 100 சிறுவர்களும் , 98 சிறுமிகளும் ஆக மொத்தம் 198 பேர் பங்கேற்றனர்.

    இதில் தமிழக அணி 709 புள்ளிகளை குவித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 8 பிரிவுகளில் தமிழ்நாடு 6 பிரிவில் முதல் இடத்தை பிடித்து முத்திரை பதித்தது.

    14 வயதுக்குட்பட்ட சிறுமியரில் கேரளாவும், சிறுவர் பிரிவில் தெலுங்கானாவும் முதல் இடத்தை பிடித்தன. மற்ற அனைத்து பிரிவுகளிலும் தமிழகம் ஆதிக்கம் செலுத்தியது.

    பதக்கம் மற்றும் பல சாதனைகளை புரிந்த தமிழக வீரர் , வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.

    • தமிழக அணிகளை தமிழ்நாடு தடகள சங்ச செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார்.
    • 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.

    சென்னை:

    33-வது தென்மண்டல ஜூனியர் தடகள போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.

    14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு தடகள சங்ச செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார். 98 சிறுமிகளும், 100 சிறுவர்களும் ஆக மொத்தம் தமிழக அணிக்கு 198 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ×