search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் பள்ளி வாகனம்"

    • பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், பொதுத்தேர்வு நடைபெறும் நாட்கள் போன்ற தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • பள்ளிகள் முழு அளவில் தொடங்குவதால் பாதுகாப்பு வசதிகளை ஒவ்வொரு பள்ளியிலும் செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.

    சென்னை:

    கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நாளை மறுநாள் (13-ந்தேதி) திறக்கப்படுகின்றன.

    2 வருடத்திற்கு பிறகு இந்த கல்வியாண்டு வழக்கமான முறையில் பள்ளிகள் தொடங்கப்படுகிறது. பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், பொதுத்தேர்வு நடைபெறும் நாட்கள் போன்ற தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் பள்ளிகள் முழு அளவில் தொடங்குவதால் பாதுகாப்பு வசதிகளை ஒவ்வொரு பள்ளியிலும் செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.

    வளாகம், வகுப்பறை தூய்மை, கழிப்பிடம், குடிநீர் தொட்டிகளை தூய்மையாக வைத்திருக்க கல்வி அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.

    தமிழகம் முழுவதும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை 13-ந்தேதி முதல் கட்டமாக வகுப்புகள் தொடங்குவதால் அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாணவர்களை ஏற்றி செல்லக்கூடிய பள்ளி வாகனங்களில் மோட்டார் வாகன விதிகளின் படி அனைத்து பாதுகாப்பு வசதிகளும் உள்ளதா என்று ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் சுமார் 1000 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் உள்ள வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

    இந்த ஆய்வின் போது போலீஸ் வருவாய்த்துறை மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் அயனாவரம், அண்ணாநகர், வியாசர்பாடி, பேசின்பிரிட்ஜ், வளசரவாக்கம், கே.கே.நகர், மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு வட்டார போக்கு வரத்து அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் சோதனை இன்று முதல் தொடங்கியது.

    பள்ளி வாகனத்தின் படிக்கட்டு உறுதியுடன் உள்ளதா? வாகனத்தின் உறுதி தன்மை, முதல் உதவி பெட்டி, வேகக்கட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசர கால உதவி போன்றவை முறையாக செயல்படுகிறதா என்பதை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர்.

    வடசென்னை, தென் சென்னை மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்கு வரத்து இணை ஆணையர் (தெற்கு) கூறும் போது, மதுராந்தகம், செங்கல்பட்டு பகுதியில் உள்ள பள்ளி வாகனங்களில் ஆய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், குன்றத்தூர் போன்ற இடங்களில் இன்று தொடங்கியது.

    பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறைவாக இருந்தால் அதனை நிவர்த்தி செய்து பின்னர் மீண்டும் ஆய்வு செய்து பயன் படுத்தப்படும். மாணவர்களின் பாதுகாப்பில் எவ்வகையிலும் சமரசம் இல்லாதவாறு நடவடிக்கை தொடரும் என்றார்.

    ×