search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிக்குடிநீர் திட்டம் நிறைவேற்ற முடியாது"

    • தற்போது பத்து நாளைக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது என்றார்.
    • தொட்டில்பட்டியில் ரூ.693 கோடியில் தனி குடிநீர் திட்டம் தேவையில்லாத ஒன்று.

    சேலம்

    சேலம் மாநகராட்சி இன்று காலை மேயர் ராமசந்திரன் தலைமையில் நடந்தது.இதில் 60-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ஆனைவரதன் பேசும்போது, எனது வார்ட்டில் சாலை, சாக்கடை, குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடு பார்க்காமல் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்க மாநகராட்சி முன்வர வேண்டும். கடந்த காலங்களில் வாரம் இரு முறை குடிநீர் வந்தது.தற்போது பத்து நாளைக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது என்றார்.

    சேலம் 44-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் இமயவர்மன் பேசும்போது, மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அ.தி.மு.கவை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசும்போது, மேட்டூர் தொட்டில்பட்டியில் ரூ.693 கோடியில் தனி குடிநீர் திட்டம் தேவையில்லாத ஒன்று. இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றார். மேலும் இத்திட்டத்தை கண்டித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் யாதவமூர்த்தி, ஜனார்த்த னன், மோகனபிரியா, ஆனைவரதன் ஆகியோர் கண்டிக்கிறோம் என்று கூறியபடி மேயர் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து மேயர் ராமசந்தி ரன் அவர்களை வெளி யேற்றுமாறு உத்தரவிட்டார்.

    அப்ேபாது தி.மு.க கவுன்சிலர்கள் முருகன், தெய்வலிங்கம், சாந்தமூர்த்தி, ஈசன் இளங்கோ, அசோகன், சரவணன் மூர்த்தி ஆகியோருக்கும், அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. இதையடுத்து தி.மு.க கவுன்சிலர்கள், அ.தி.மு.க. கவுன்சிலர்களை வெளியேற்றினர்.இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி கூறும்போது, தனிக்குடிநீர் திட்டம் நிறைவேற்ற முடியாது. இதற்கு போதுமான நிதி இல்லை. கடந்த ஒரு ஆண்டில் தி.மு.க. அரசு மாநகராட்சிக்கு எந்த நிதியும் வழங்கவில்லை. தற்போது அனைத்து பணிகளும் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் தான் நடைபெறுகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கும் நேரு, சேலம் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். அவர் இதுவரை மாநகராட்சிக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை.சேலம் புதிய பஸ் நிலை யத்தில் புதிய கடைகளுக்கு அனுமதி வழங்கபடுவதால் பல முறைகேடு நடக்கிறது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஆயிரம் ஒதுக்கப்பட்டு, பல்வேறு பணிகள் நடைபெற்றன என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து தி.மு.க. கவுன்சர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை கூறினார். இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சித் தலைவர் ஜெயக்குமார் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றுவதாக கூறினார். சேலம் மாநகர் முழுவதும் அனைத்து தார் சாலைகளும் போடப்படும் என மேயர் தெரிவித்தார். 

    ×