search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு விழிப்புணர்வு போட்டி"

    • விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நல்ல முறையில் கையாளுதல் குறித்து மாணவ, மாணவிகளிடம் தெரிவிக்கப்படும்.

    திருப்பூர்:

    சமீபகாலமாக மாணவர்கள் பலர், சைபர் க்ரைம் குற்றங்களில் சிக்கி பாதிக்கின்றனர். இதனைத்தடுக்கும் வகையில் போலீசார், அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.அவ்வகையில் தற்போது, திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்தும் பள்ளிகளிலும் இணைய வழி குற்றங்களை தடுக்கும் வகையில், 'சைபர் ஜாக்ருதா திவாஸ்' என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: - இந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை சைபர் குற்றங்களில் இருந்து மாணவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து போட்டிகள் நடத்தப்படுகிறது.மேலும், இணைய வழி குற்றங்கள் மாணவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும், மாணவர்கள் பயன்படுத்தும் மொபைல் போன்கள் வாயிலாக இணைய குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது. குற்றங்கள் தவறான வழிக்கு எடுத்துச்செல்வதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.குறிப்பாக நவீன சாதனங்களை நல்ல முறையில் கையாளுதல் குறித்து மாணவ, மாணவிகளிடம் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×