search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை மாணவர்"

    • விசாரணை நடந்த பகுதியில் உள்ளூர் போலீசார் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி தரவில்லை.
    • இன்று மாணவர் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை அதிகாரிகள் தஞ்சாவூரில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தஞ்சாவூர்:

    சென்னைக்கு வருகிற 27-ந்தேதி வருகை தரும் பிரதமர் மோடி, முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த ஒருங்கிணைந்த புதிய விமான முனையங்களை திறந்து வைக்கிறார்.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் சென்னையில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு சென்றுள்ள இ-மெயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த பூண்டி அருகேயுள்ள சாலியமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் விக்டர் ஜேம்ஸ்ராஜா (வயது 35) என்பவரது முகவரியில் இருந்து சென்றுள்ள அந்த மெயிலில் பிரதமர் குறித்து அவதூறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் அந்த இ-மெயிலில் பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எந்த நோக்கத்துடன் அந்த மெயில் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

    இதற்காக டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரி சஞ்சய்கவுதம் மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் பூண்டிதோப்புக்கு வந்து விக்டர் ஜேம்ஸ்ராஜாவை பிடித்து தஞ்சையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கல்வி அலுவலகத்தில் ஒரு அறையில் விசாரணையை தொடங்கினர். இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்றது.

    இன்று 3-வது நாளாகவும் மாணவர் விக்டர் ஜேம்ஸ்ராஜாவிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடந்த பகுதியில் உள்ளூர் போலீசார் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி தரவில்லை. விசாரணைகள் அனைத்தும் ரகசியமாக நடந்து வருகிறது. இதன் முடிவில் எதற்காக அவதூறு இ-மெயிலை மாணவர் விக்டர் ஜேம்ஸ்ராஜா அனுப்பினார் என்பது போன்ற பல்வேறு தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் இன்று மாணவர் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை அதிகாரிகள் தஞ்சாவூரில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் மாணவர் விடுவிக்கப்படுவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா அல்லது அதிகாரிகள் தங்களது கஸ்டடியில் எடுத்து டெல்லிக்கு அழைத்து செல்வார்களா? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே மாணவர் விக்டர் ஜேம்ஸ்ராஜாவின் தந்தை ஜெயபால் கூறுகையில், எங்களது மகன் எந்த தவறும் செய்ய வாய்ப்பு இல்லை. வீட்டில் இருந்து எங்களிடம் எதுவும் கூறாமல் எனது மகனை அழைத்து சென்றுள்ளனர் என்றார்.

    ×