search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டைமிங் பிரச்சினை"

    • பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது அந்த பஸ்சை வழிமறித்து மற்றொரு தனியார் பஸ் டிரைவர் தகராறில் ஈடுபட்டார்.
    • டைமிங் பிரச்சினை குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் பேசி முடிவு எடுத்து கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

    பழனி:

    பழனி பஸ்நிலையத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு எடுத்துச்செல்வது தொடர்பாக டிரைவர், கண்டக்டர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பழனி பஸ்நிலையத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு 2 தனியார் பஸ்கள் காலை 7.45 மணிக்கு இயக்கப்பட்டன. பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது அந்த பஸ்சை வழிமறித்து மற்றொரு தனியார் பஸ் டிரைவர் தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் திண்டுக்கல்-பழனி சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் ஆயக்குடி போலீசார் விரைந்து சென்று 2 பஸ்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். மேலும் 2 பஸ்களின் ஆவணங்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

    அதில் அவர்களுக்கு ஒரே நேரத்தை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வழங்கியுள்ளது தெரியவந்தது. இதனைதொடர்ந்து இந்த பிரச்சினை குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் பேசி முடிவு எடுத்து கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

    இதில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதில் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனியில் இருந்து வந்த பஸ் 4.05 மணி வரை செம்பட்டி பஸ் நிலையத்தில் நின்று கொண்டியிருந்தது. அந்த நேரத்தில், 4.10 மணிக்கு மதுரையிலிருந்து வரவேண்டிய பஸ் 4.05 மணிக்கு செம்பட்டி பஸ் நிலையம் வந்துவிட்டது.
    • மதுரையில் இருந்த வந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் தேனியில் இருந்து வந்த டிரைவர் மற்றும் கண்டக்டருடன் தகராறில் ஈடுபட்டனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வழியாக வெளி ஊர்களுக்கு ஏராளமான பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்கிறது. இதனால் செம்பட்டி பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் தேனியில் இருந்து செம்பட்டி வழியாக, பழனிக்கு செல்லும் ஒரு தனியார் பஸ் 4 மணிக்கு செம்பட்டி பஸ் நிலையத்தை கடந்து செல்ல வேண்டும்.

    அதேபோல் மதுரையில் இருந்து வரும் மற்றொரு தனியார் பஸ் செம்பட்டி வழியாக பழனிக்கு செல்லும் போது 4.10 மணிக்கு செம்பட்டி பஸ் நிலையத்தை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் தேனியில் இருந்து வந்த பஸ் 4.05 மணி வரை செம்பட்டி பஸ் நிலையத்தில் நின்று கொண்டியிருந்தது. அந்த நேரத்தில், 4.10 மணிக்கு மதுரையிலிருந்து வரவேண்டிய பஸ் 4.05 மணிக்கு செம்பட்டி பஸ் நிலையம் வந்துவிட்டது.

    இதனால், மதுரையில் இருந்த வந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் தேனியில் இருந்து வந்த டிரைவர் மற்றும் கண்டக்டருடன் தகராறில் ஈடுபட்டனர். 2 பஸ்களையும் திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி பஸ்கள் பெரும் சிரமத்திற்கு இடையே கடந்து சென்றது.

    ×