search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீ விலை உயர்வு"

    • கடந்த 2 வாரமாக இஞ்சி விலை உயர்ந்து இருப்பதால் வீட்டு சமையலில் குறைவாக பயன்படுத்துகின்றனர்.
    • உடல் ஆரோக்கியத்திற்கு இஞ்சி டீ நல்லது என்பதால் பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    சென்னை:

    தக்காளி, இஞ்சி விலை உயர்வு 20 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரத்து மிகவும் குறைவாக இருப்பதே இந்த விலை உயர்வுக்கு காரணம். தக்காளியை விட இஞ்சி விலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

    கடந்த வாரம் சில்லரையில் கிலோ ரூ.320 வரை விற்கப்பட்டது. தற்போது சற்று குறைந்து கிலோ ரூ.250-க்கு விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட் மொத்த விற்பனையில் கிலோ ரூ.210-க்கு இன்று விற்கப்பட்டது. ஆனால் காய்கறி கடைகளில் சில்லரையில் ரூ.240 முதல் ரூ.260 வரை விற்கப்படுகிறது. வழக்கமாக இஞ்சி கிலோ ரூ.100, ரூ.120 விற்கப்படும். தேவைக்கு போதுமான அளவு கிடைக்கும்.

    ஆனால் கடந்த 2 வாரமாக இஞ்சி விலை உயர்ந்து இருப்பதால் வீட்டு சமையலில் குறைவாக பயன்படுத்துகின்றனர்.

    மேலும் ஓட்டல், டீக்கடைகளில் இஞ்சி டீ பயன்பாடும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இஞ்சி டீ ரு.12, ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை ரூ. 20 ஆக உயர்ந்தது.

    சென்னையில் இஞ்சி டீ பிரியர்கள் அதிகமாக உள்ளனர். உடல் ஆரோக்கியத்திற்கு இஞ்சி டீ நல்லது என்பதால் பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    இஞ்சி விலை தங்கம் போல குறையாமல் நிலையாக இருப்பதால் ஓட்டல் மற்றும் டீக்கடைகளில் இஞ்சி டீக்கு பதிலாக சாதாரண டீயை குடிக்கிறார்கள்.

    சாலையோர சிறுசிறு டீக்கடைகளில் கூட இஞ்சி டீ ரூ.15-க்கு விற்கப்படுகிறது. அண்ணா சாலையில் ஒரு சிறிய டீக்கடையில் ரூ.20-க்கு விற்கப்படுகிறது.

    இதுபற்றி டீக்கடை உரிமையாளர்கள் கூறும்போது, இஞ்சி விலை குறையும் வரை இஞ்சி டீ விலையை குறைக்க இயலாது. வாடிக்கையாளர்கள் விருப்பத்தை கேட்டு தான் இஞ்சி டீ வழங்குகிறோம். சிலர் விலை உயர்வால் இஞ்சி டீ வேண்டாம் எனக் கூறி சாதாரண டீக்கு மாறுகிறார்கள் என்றார்.

    ×