search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிலிங்கேஸ்வர்"

    • 16 வகையான வாசனைத்திரவியங்களால் அபிஷேகம் நடத்தப் பட்டது.
    • சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிஅருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வ ரர் உடனுறை ஸ்ரீபர்வத வர்த்தி னி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆனி மாத மகாசனி பிரதோஷம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதிலிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாப்பொடி, திருமஞ்சன பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனைத்திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப் பட்டது.

    அபிஷேகத்தை சிவாச்சா ரி யார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண் பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் ஆகிய 9 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    • கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்து உள்ளது.
    • 16 வகையான வாசனைத் திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்து உள்ளது.

    இந்த மலையில் ஜோதி லிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷம் நேற்று மாலை நடைபெற்றது.

    இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்ச னப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டு சர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனைத் திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் ஆகிய 9 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    ×