search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூனியர் ஹாக்கி"

    ஸ்பெயினில் அடுத்த மாதம் 10-ந்தேதி தொடங்கும் 8 நாடுகளுக்கிடையிலான ஜூனியர் ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஸ்பெயின் நாட்டில் 8 அணிகள் பங்கேற்கும் 21 வயதிற்குபட்டோருக்கான ஹாக்கி தொடர் நடக்கிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 10-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மந்தீப் மோர் கேப்டனாகவும், சுமன் பெக் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஜூனியர் அணி விவரம்:

    பின்கள ஆட்டக்காரர்கள் (Defenders): மந்தீப் மோர், பிரதாப் லக்ரா, சஞ்சய், அக்‌ஷ்தீப் சிங் ஜூனியர், சுமன் பெக், பரம்ப்ரீத் சிங்

    நடுகள வீரர்கள் (Midfielders): யாஷ்தீப் சிவாச், விஷ்னு காந்த் சிங், ரபிசந்த்ரா சிங் மொய்ரங்தெம், மணிந்தர் சிங், விஷால் அன்டில்

    முன்கள வீரர்கள் (Forwards): அமன்தீப் சிங், ராகுல் குமார் ராஜ்பர், ஷிபம் ஆனந்த், சுதீப் சிர்மாகோ, பிரப்ஜோத் சிங்

    கோல் கீப்பர்கள்: பிரசாந்த் குமார் சவுகான், பவன்.
    ×