search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜப்தி நடவடிக்கை"

    • கொரோனா பாதிப்பு, தொழில் நஷ்டம் உள்ளிட்ட காரணங்களால், பாக்கி தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
    • 7 நாட்களுக்கு கால அவகாசம் வழங்குவதாக அறிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் வசிக்கும் ஒருவர், அவரது வீட்டை விரிவாக்கம் செய்வதற்காக,தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2019 ம் ஆண்டு ரூ.28லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் ரூ.13 லட்சம் திருப்பி செலுத்தியுள்ளார். இதற்கிடையே கொரோனா பாதிப்பு, தொழில் நஷ்டம் உள்ளிட்ட காரணங்களால், பாக்கி தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடனை திருப்பி செலுத்த அவர் நிதி நிறுவனத்தில் கால அவகாசம் கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 31 வரை அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், கெடு தேதி முடிந்ததால் நிதி நிறுவனத்தினர், நீதிமன்ற உத்தரவு பெற்று அவரது வீட்டை ஜப்தி செய்வதற்காக சம்பவத்தன்று போலீசார் உடன் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு உள்பக்கமாக கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிதி நிறுவனத்தார், மேலும் 7 நாட்களுக்கு கால அவகாசம் வழங்குவதாக அறிவித்தனர். இதையடுத்து உள்ளிருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    ×