search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோமாலிய தடகள வீராங்கனை"

    • சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்ற மோசமான வீராங்கனை என்று பலர் விமர்சனம் செய்தனர்.
    • சோமாலி தடகள சம்மேளன தலைவரின் மருமகள். அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    சீனாவில் சமீபத்தில் கோடைகால சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில், 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற சோமாலிய வீராங்கனை மிகவும் மந்தமாக ஓடி கடைசியாக வந்து இலக்கை தொட்டார்.

    கடைசியாக வந்த வீராங்கனையின் வீடியோவை ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ வைரலானது. அந்த வீராங்கனை சரியாக பயிற்சி பெறாததுபோல் தோன்றியது. வீடியோவைப் பார்த்த பலரும் சோமாலியாவின் தடகள அமைப்பை கேலி செய்யத் தொடங்கினர். இந்த புதிய ஓட்டப்பந்தய வீராங்கனையை சீனாவில் நடக்கும் போட்டிக்கு அனுப்பியதன் பின்னணி குறித்து பல பயனர்கள் கேள்வி எழுப்பினர். அந்த வீராங்கனை தடகள போட்டியின் வரலாற்றில் மிக மெதுவாக ஓடியதற்கான சாதனையை படைத்துள்ளார் என்றும், சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்ற மோசமான வீராங்கனை என்றும் விமர்சனம் செய்தனர்.

    இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த எல்ஹாம் கராட் என்ற பயனர், சோமாலிய அதிகாரிகளை வாரிசு ஆதிக்கம் என்று குற்றம் சாட்டினார். "அது சோமாலி தடகள சம்மேளன தலைவரின் மருமகள். அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? இது வாரிசு ஆதிக்கம். சோமாலியாவில் எங்களிடம் சிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர், ஆனால் பணம் என்று வரும்போது அது வேறு கதை" என்று ட்வீட் செய்தார்.

    இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சோமாலி தடகள கூட்டமைப்பின் தலைவர் காதிஜோ அடன் தாஹிரை சோமாலியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சஸ்பெண்ட் செய்திருப்பதாக அறிவித்தது.

    ×