search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோனியா காந்தி பிறந்தநாள் விழா"

    மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    சோனியாகாந்தியின் 76-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதற்கு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ரோஜாபேகம் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

    இதில் முன்னாள் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முகமது சித்திக், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் குப்புசாமி, மச்சக்காளை, அம்சவள்ளி, சிவாஜி, கவுன்சிலர் பாரதி, மண்டல தலைவர்கள் அப்பாஸ் மந்திரி, உதயகுமார், பரமன், நாகலட்சுமி, துணை தலைவர்கள் ஜோதி இராமலிங்கம், அப்துல் ரகுமான், வட்டாரத் தலைவர் மதுரை வீரன், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்ட தலைவர் காளிராஜ், நிர்வாகிகள் நிக்கோலஸ், அமீர்அம்ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×