search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோகம்"

    • திருமணமாகாத நிலையில் அவரும், தாய் மீனாட்சியம்மாள் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
    • நீண்ட நேரம் அசைவின்றி இருந்தவரை உறவினர்கள் எழுப்பியபோது அவரும் இறந்தது தெரியவந்தது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் தாய் இறந்த சில மணி நேரத்தில் மகனும் இறந்த சம்பவம், உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.பட்டுக்கோட்டை நாடிமுத்து நகர், வெங்கடராம அய்யர் நகரை சேர்ந்தவர் டாக்டர் சாம்பமூர்த்தி.

    இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி மீனாட்சியம்மாள் (98).

    இவர்களுக்கு 5 மகன்கள். இதில் 4 மகன்களுக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

    கடைசி மகனான ஜெயசந்திரன் (68) என்பவருக்கு மட்டும் திருமணமாகாத நிலையில் அவரும், தாய் மீனாட்சியம்மாள் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

    ஜெயச்சந்திரன் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் மீனாட்சியம்மாள் வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார்.

    இதையடுத்து ஜெயச்ச ந்திரன் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார்.

    தாய் இறந்த சோகத்தில் அழுதபடி இருந்த ஜெயச்சந்திரனை உறவினர்கள் ஆறுதல் படுத்தியுள்ளனர்.

    பின்னர் காலை 10.30 மணியளவில் ஜெயச்சந்திரனும் இருக்கையில் அமர்ந்திருந்த படியே மாரடைப்பால் இறந்து விட்டார்.

    நீண்ட நேரம் அசைவின்றி இருந்த அவரை உறவினர்கள் எழுப்பியபோது அவரும் இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து இருவரையும் உறவினர்கள் ஒன்றாக கரிக்காடு எரிவாயு மயானத்தில் தகனம் செய்தனர். தாய் இறந்த துக்கம் தாங்காமல், மகனும் இறந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    • பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் வேலை பார்த்து வரும் உறவினர்கள் அவ்வப்போது உதவி செய்து வந்துள்ளனர்.
    • உரிய வாழ்வாதாரம் இல்லாததால் இருவரும் மனவேதனையில் இருந்து வந்த நிலையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மதகரம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகையன் (வயது65). இவருடைய மனைவி சின்னாச்சி (57). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் மிகுந்த வறுமையுடனும், ஆதரவற்ற நிலையிலும் வாழ்ந்து வந்தனர்.

    பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் வேலை பார்த்து வரும் உறவினர்கள் இவர்களுக்கு அவ்வப்போது உதவி செய்து வந்துள்ளனர். ஆனாலும் உரிய வாழ்வாதாரம் இல்லாததால் இருவரும் மனவேதனையில் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் களைக்கொல்லி பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    இதில் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை, அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகையன், சின்னாச்சி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வலங்கை மான் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வறுமையால் மனவேதனை அடைந்த வயது முதிர்ந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொ ண்டது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படு த்தி உள்ளது.

    ×