தாய் இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு

திருமணமாகாத நிலையில் அவரும், தாய் மீனாட்சியம்மாள் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.நீண்ட நேரம் அசைவின்றி இருந்தவரை உறவினர்கள் எழுப்பியபோது அவரும் இறந்தது தெரியவந்தது.
பட்டுக்கோட்டையில் ஒரே நேரத்தில் உயிரிழந்த தாய் மற்றும் மகன் உடல்கள்.
பட்டுக்கோட்டையில் ஒரே நேரத்தில் உயிரிழந்த தாய் மற்றும் மகன் உடல்கள்.
Published on

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் தாய் இறந்த சில மணி நேரத்தில் மகனும் இறந்த சம்பவம், உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.பட்டுக்கோட்டை நாடிமுத்து நகர், வெங்கடராம அய்யர் நகரை சேர்ந்தவர் டாக்டர் சாம்பமூர்த்தி.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி மீனாட்சியம்மாள் (98).

இவர்களுக்கு 5 மகன்கள். இதில் 4 மகன்களுக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

கடைசி மகனான ஜெயசந்திரன் (68) என்பவருக்கு மட்டும் திருமணமாகாத நிலையில் அவரும், தாய் மீனாட்சியம்மாள் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

ஜெயச்சந்திரன் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் மீனாட்சியம்மாள் வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார்.

இதையடுத்து ஜெயச்ச ந்திரன் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார்.

தாய் இறந்த சோகத்தில் அழுதபடி இருந்த ஜெயச்சந்திரனை உறவினர்கள் ஆறுதல் படுத்தியுள்ளனர்.

பின்னர் காலை 10.30 மணியளவில் ஜெயச்சந்திரனும் இருக்கையில் அமர்ந்திருந்த படியே மாரடைப்பால் இறந்து விட்டார்.

நீண்ட நேரம் அசைவின்றி இருந்த அவரை உறவினர்கள் எழுப்பியபோது அவரும் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் உறவினர்கள் ஒன்றாக கரிக்காடு எரிவாயு மயானத்தில் தகனம் செய்தனர். தாய் இறந்த துக்கம் தாங்காமல், மகனும் இறந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com