search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைகை மொழி"

    • 5 நாள் சைகை மொழி பயிற்சி திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளியில் துவங்கியுள்ளது.
    • அடுத்தகட்ட பயிற்சி வரும் 27ந் தேதி துவங்கி ஜூலை 1-ந் தேதி வரை நடக்கிறது.

    திருப்பூர் :

    ஒருங்கிணைந்த பள்ளிகல்வி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு, 5 நாள் சைகை மொழி பயிற்சி திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளியில் துவங்கியுள்ளது.

    மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை சைகை மொழி பெயர்ப்பாளர் கழக நிறுவனர் அருண், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி ஆகியோர் துவக்கி வைத்தனர். இப்பயிற்சியை திருப்பூர் வட்டார வள மைய பொறுப்பு மேற்பார்வையாளர் அலிமா முன்னிலை வகித்து பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்தார்.சைகை மொழி பெயர்ப்பாளர் கழக தலைவர் ரேணுகா, சைகை மொழி மற்றும் மொழி வளர்ச்சியை பற்றி விரிவாக விளக்கமளித்தார். பயிற்சியாளர் அலி, மொழி பெயர்ப்பாளர் நித்யா ஆகியோர் சிறப்பாசிரியர்களுக்கான பயிற்சியை வழங்கினர்.

    இதில் 32 சிறப்பாசிரியர்கள், மற்றும் இயன்முறை மருத்துவர்கள் பங்கேற்றனர். அடுத்தகட்ட பயிற்சி வரும் 27ந் தேதி துவங்கி ஜூலை 1-ந் தேதி வரை நடக்கிறது.

    ×