search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேத்துப்பட்டு ரெயில் நிலையம்"

    • சேத்துப்பட்டு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மனித கால் கிடந்தது.
    • பராமரிப்பு பணிக்காக யார்டுக்கு வந்தபோது இந்த கால் ரெயிலில் அடிபட்டு தொங்கி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மனித கால் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே ஊழியர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று காலை மீட்டு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கால் யாருடையது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பராமரிப்பு பணிக்காக யார்டுக்கு வந்தபோது இந்த கால் ரெயிலில் அடிபட்டு தொங்கி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×