search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேதமான வீடு"

    • சேதமான வீடுகள்-மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதியளித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4-ந் தேதி பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில் வீடுகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை சேத மடைந்தன. பல கிராமங்க ளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட னர்.

    இந்த நிலையில் மழை யால் சேதமடைந்த பகுதி களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர், பொதுமக்களிடம் பாதிப்பு கள் குறித்து கேட்டறிந்து இயல்பு நிலைக்கு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.

    தொடர்ந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    அருப்புக்கோட்டை பகுதியில் பெய்த கன மழையால் 53 வீடுகளின் ஓடுகள் சேத மடைந்துள்ள தாக தற்போது வரை கணக்கெடுக்கப் பட்டுள்ளது. மேலும் மரங்கள், மின்கம்பங் கள், ஒரு சில இடங்களில் மின்மாற்றிகள் விழுந்து சேதமடைந்துள்ளது. முதல்-அமைச்சரின் உத்தரவின்படி சேதங்களை சீரமைக்க பணி கள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    தற்போது வரை சேத மடைந்த மின்கம்பங்களின் 90 சதவீத மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. விரை வில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் விஜயலட்சுமி, மண்டல செயற்பொறியாளர் கனகராஜ், மாவட்ட தீய ணைப்புத்துறை அலுவலர் விவேகானந்தன், அருப்புக் கோட்டை கோட்டாட்சியர் (பொ) அனிதா, நகராட்சி ஆணையாளர் அசோக் குமார், வட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×