search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேதமடைந்த வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு"

    • பள்ளங்கி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.
    • பழுதான தொகுப்பு வீடுகளை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பள்ளங்கி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.

    ஜெ நகர் பழங்குடியினர் காலனி தொகுப்பு வீடுகளில் கனமழை காரணமாக மழை நீர் உள்ளே புகுவதை தடுக்கும் பொருட்டு, தற்காலிக நிவாரணமாக சுமார் 32 குடும்பத்தினருக்கு தார்ப்பாய்கள் வழங்க டி.வி.எஸ் நிறுவனத்தின் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையினர்(SST) ஏற்பாடு செய்திருந்தனர். இதனை கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராஜா பழங்குடியின மக்களுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்வில் வில்பட்டி ஊராட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி வில்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வாசு, வார்டு உறுப்பினர் சாய்ராம்பாபு, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பழுதான தொகுப்பு வீடுகளை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதற்கு கோட்டாட்சியர் தங்கள் வீடுகளை ஆய்வு செய்யவே வந்ததாகவும் விரைவில் சேதமடைந்துள்ள வீடுகளை விரைவில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    ×