search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் ஆப்"

    • தற்போது வாட்ஸ் ஆப்களில் வரும் மெசேஜ்களில், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம், யுடியூப்களில், லைக் மற்றும் ப்ளூ டிக் வர வேண்டுமென்றால் அதற்கேற்ப தொகையை செலுத்த வேண்டும்.
    • இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பணம் அனுப்பி ஏமாறி வருகின்றனர்.

    தாராபுரம்:

    சமூக வலைதளங்களில், லைக் மற்றும் ப்ளூ டிக் பெறுவதற்கு பணம் செலுத்தினால், பாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கும் என வாட்ஸ் ஆப்களில் குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது.

    இன்ஸ்டாகிரம், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போட்டோக்கள், செய்திகளை வெளியிட்டு லைக்குகளை குவிப்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இந்நிலையில் இளைஞர்களை கவரும் வகையில் லைக்,பாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமா, அதற்கேற்ப தொகையை செலுத்தினால் போதும். நாங்கள் அந்தப் பணியை செய்து தருகிறோம் என மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதை சிலர் தொழிலாக செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

    தற்போது வாட்ஸ் ஆப்களில் வரும் மெசேஜ்களில், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம், யுடியூப்களில், லைக் மற்றும் ப்ளூ டிக் வர வேண்டுமென்றால் அதற்கேற்ப தொகையை செலுத்த வேண்டும்.இன்ஸ்டாகிராமில் ஒன் கே பாலோயர்ஸ் வேண்டுமென்றால் 200 ரூபாய், 500 பேருக்கு 110 ரூபாய்,200 பேருக்கு 70 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என விளம்பரம் செய்கின்றனர்.மாதிரிக்காக 35 ரூபாய் செலுத்தினால் 100 பாலோயர்ஸ் உருவாக்கித் தருகின்றனர்.

    இதுபோன்று வரும் செய்திகளை நம்பி ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பணம் அனுப்பி ஏமாறி வருகின்றனர். இதுபோன்று லிங்க் வந்தால் அதை கிளிக் செய்வதால், வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் முழுவதும் அபேஸ் ஆகிவிடும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், இதுபோன்ற புகார்கள் எதுவும் வரவில்லை. வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதை தொழிலாக செய்கின்றனரா அல்லது ஏமாற்று வேலையா என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். தேவையில்லாத மொபைல் ஆப்களை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    ×