search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்யது சிராஜுதின் தர்கா"

    • குலசேகரன்பட்டினம் செய்யது சிராஜுதீன் தர்காவில் கந்தூரி விழா 12 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.
    • தர்கா முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு கந்தூரி விழா தொடங்கியது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் கடற்கரையில் அமைந்துள்ள செய்யது சிராஜுதீன் தர்கா தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற தர்காவில் ஒன்றாகும். இங்கு வருடம் தோறும் கந்தூரி விழா 12 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வைத்து ஊர்வலமாக சென்று தர்கா முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் விழா தொடங்கியது. விழா நாட்களில் தினசரி காலை, மாலையில் சிறப்பு தொழுகை மார்க்க உபன்னியாசம் தொடர்ந்து நடைபெறும். விழாவின் முக்கிய நாட்களான வருகிற 4-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சந்தனம் பூசப்பட்டு அபூர்வ துவா ஓதி ஓதப்படும், 5-ந் தேதி நள்ளிரவு 2 மணிக்கு தர்காவில் இருந்து சந்தனக்கூடு அலங்காரத்துடன் ஊர் முழுவதும் சுற்றி வரும் வீடு தோறும் தப்ரூக் வழங்கப்படும்.

    6-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு வான வேடிக்கை, 7-ந் தேதி இரவு 7 மணி 10 மணி வரை விளக்கு ஏற்றப்படும், 8-ந் தேதி கொடி இறக்கப்பட்டு கந்தூரிவிழா நிறைவு பெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மூத்தவல்லி ரஹ்மத்துல்லா இமாம் செய்து வருகிறார்.

    ×