search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்பாடுகள் குறித்து ஆய்வு"

    • திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    • மத்திய அரசின் திட்டத்தின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட விபரங்களை எம்.பி வேலுச்சாமி எடுத்துரைத்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் விசாகன் முன்னிலையில் கண்காணிப்பு குழுத்தலைவர் மற்றும் திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி, துணைத்தலைவரான கரூர் எம்.பி ஜோதிமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    குழு உறுப்பினர்களான மேயர் இளமதி, கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

    தீன தயாள் உபாத்தியாயா கிராமின் கவுல்சலயா யோஜனா (திறன் வளர்ப்பு பயிற்சி), பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டம், பிரதம மந்திரி பாசல் பீமா பீமா யோஜனா, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மண் சுகாதார அட்டை, மின்னணு-தேசிய வேளாண் சந்தை, பாரத பிரதமர் நுண்ணீர் பாசனத் திட்டம், பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம்,

    தேசிய நலக்குழுமம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா(உதய் மின் மேம்பாட்டுத்திட்டம்) மற்றும் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத இயக்கம், நகர்ப்புறம், பாதாள சாக்கடை திட்டம் - அம்ரூத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டம், தேசிய சமூக பாதுகாப்புத்திட்டம், அன்னபூர்ணா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா,

    பிரதான் மந்திரி கனிச் ஷேத்ரா கல்யாண் யோஜனா, பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா, பிரதான் மந்திரி ஜன்விகாஸ் கார்யக்ரம், நில அளவை ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டம், டிஜிட்டல் இந்தியா ஒவ்பொரு கிராமத்திற்கும் பொது சேவை மையம் மூலம் பொது இணைய சேவை வழங்கும் திட்டம், மாவட்டத் தொழில் மையம், கேலோ இந்தியா, நேரு யுவ கேந்திரா, பிரதான் மந்திரி கவுசல விகாஷ் யோஜனா,

    தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி கிராமின் அவாஸ் யோஜனா, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு மத்திய அரசுத் திட்டங்களின் பயன்பாடு முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

    இக்கூட்டத்தில் வேலுச்சாமி எம்.பி பேசியதாவது:-

    திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

    அதன்படி 2022-23-ஆம் நிதியாண்டிற்கான முதல் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலகங்களில் இருந்து 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுகளுக்குரிய திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.

    ×