search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம்"

    • 2 பயணிகளும் தாங்கள் கொண்டு வந்த பணத்திற்கு எவ்வித ஆவணங்களும் தரவில்லை.
    • ரூ.37 லட்சத்திற்கு முறையான கணக்கை காட்டினால் மட்டுமே அந்த பணம் திரும்பி கொடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் 2 பயணிகள் ரூ.37 லட்சம் பணத்துடன் சிக்கினர்.

    பெங்களூரு, ஆந்திராவை சேர்ந்த இருவர் கணக்கில் வராத பணத்தை கையில் கொண்டு வந்ததால் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    பெங்களூருவில் இருந்து வந்த ரெயிலில் பயணி ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தனர். அவர் கையில் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தன.

    அவரிடம் விசாரணை நடத்தியதில் கிருஷ்ணமூர்த்தி (53) பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. சென்னை சவுகார்பேட்டையில் தங்க வியாபாரி ஒருவரிடம் ரூ.25 லட்சம் ஒப்படைக்க கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

    இதே போல் இன்று காலையில் ஐதராபாத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த வாசு(42) என்பவர் பையில் ரூ.11 லட்சத்து 98 ஆயிரம் பணம் இருந்தது. மிண்ட் தெருவில் தங்கம் வாங்குவதற்காக இந்த ரொக்கத்தை கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

    2 பயணிகளும் தாங்கள் கொண்டு வந்த பணத்திற்கு எவ்வித ஆவணங்களும் தரவில்லை. வரி ஏய்ப்பு செய்யும் வகையில் ரொக்கமாக பெரும் தொகையை கொண்டு வந்து சென்னையில் தங்கம் வாங்கி செல்ல வந்து இருக்கலாம் என தெரிகிறது.

    இதையடுத்து கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்ததோடு வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவகணேசன் இருவரையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அவர்களிடம் பிடிபட்ட பணத்திற்கான ஆதாரங்களை கேட்டு விசாரித்து வருகின்றனர்.

    ரூ.37 லட்சத்திற்கு முறையான கணக்கை காட்டினால் மட்டுமே அந்த பணம் திரும்பி கொடுக்கப்படும்.

    ×