search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல் உற்பத்தி பாதிப்பு"

    • வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் இந்த தொழில் முடக்கத்தில் உள்ளது.
    • அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம். பாலக்கோடு, மாரண்டஹள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் , மற்றும் பொம்மிடி என மாவட்டம் முழுவதும் செங்கல் சூளைகள் பெருமளவு செயல்பட்டு வருகின்றன.தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்கும் தொழிலாகவும் உள்ளது.

    இந்த பகுதியில் தரமான செங்கல் தயாரிப்பதாலும், நீண்ட காலமாக தொழில் அனுபவம் பெற்றவர்கள் உள்ளதாலும், நல்ல தரம் வாய்ந்த செம்மண் இந்த பகுதியில் கிடைப்பதாலும் இந்த செங்கல்களுக்கு மாநிலம் முழவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இங்குள்ள செங்கல் சூளைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    செங்கல் உற்பத்தி மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரம் பேர் இந்த தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் இந்த தொழில் முடக்கத்தில் உள்ளது. மழைக்காலங்களில் நனையாதபடி சூளை அடுப்பிற்கு மேற்கூரை அமைப்புக்களுடன் கூடிய வசதியும், செங்கல் அறுக்கும் களத்திற்கும் மேற்கூரையும் இல்லாததால் இந்த தொழிலை நம்பியுள்ள செங்கல் உற்பத்தி தொழிலாளர்கள் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தயாரித்த செங்கற்கலை வெளியில் அனுப்பும் வேலை இல்லாததால் லாரிகளில் செங்கற்கள் எடுத்துச் சென்று கொடுக்கும் தொழிலாளர்களும் வேலை இன்றி தவிக்கின்றனர். தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேலாக இதே நிலை நீடிப்பதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×