search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமைக்கப்படுமா"

    • பழைய பாலம் கட்டப்பட்டு 65 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக பழைய பாலத்தின் குறுக்கே நெடுகிலும் சுமார் 14 இடங்களில் பெரிய குழிகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாக்கு மூலம் குழிகளை அடைத்து அதற்கு மேல் தார் பூசினார்கள்.
    • இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் நெடுகிலும் உள்ள குழிகளில் பட்டு விபத்து ஏற்பட்டு காயம் அடைந்து செல்கின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல்லுடன் இணைந்தி ருந்த சேலம், கரூருடன் இணைந்திருந்த திருச்சி ஆகிய 2 ஒருங்கிணைந்த மாவட்டங்க ளை இணைக்கும் வகையில் பரமத்தி வேலூர்-தவி ட்டுப்பாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1957-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. அப்போதைய அமைச்சர் ராஜாஜி இந்த புதிய பாலத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அதன் பிறகு அந்த பாலத்தின் வழியாக ஓசூர், பெங்களூரு ,சேலம், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் பகுதிகளில் இருந்து ராமநாதபுரம், ராமேஸ்வரம், மதுரை, திண்டுக்கல், கரூர், கோவை , ஈரோடு, அரவக்கு றிச்சி, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அதே போல் இந்த பகுதிகளில் இருந்து பெங்களூரு, சேலம், நாமக்கல், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் பல்வேறு வகையான லாரிகள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும் , இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன.

    இந்த பாலம் கட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக பாலத்தின் உறுதி தன்மை குறைந்தது. இதனால் பல கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. வாகனங்கள் இந்த 2 பாலங்கள் வழியாகவும் சென்று வருகின்றன.

    பழைய பாலம் கட்டப்பட்டு 65 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக பழைய பாலத்தின் குறுக்கே நெடுகிலும் சுமார் 14 இடங்களில் பெரிய குழிகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாக்கு மூலம் குழிகளை அடைத்து அதற்கு மேல் தார் பூசினார்கள்.

    ஆனால் சரியானபடி குழிகளை சீரமைக்காததால் மீண்டும் பழைய பாலத்தில் நெடுகிலும் குழிகள் அகலமாகி பெரிதாக உள்ளது .இதன் காரணமாக பழைய பாலத்தின் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மெதுவாக செல்கின்றன. அப்போது குழிகளில் டயர்கள் வேகமாக படும்போது டயர் வெடித்து பஞ்சர் ஆகி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    மேலும் இருசக்கர வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக மிகவும் மெல்ல செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் நெடுகிலும் உள்ள குழிகளில் பட்டு விபத்து ஏற்பட்டு காயம் அடைந்து செல்கின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    அதனால் தொடர்ந்து காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலம் சிதலடைந்து குழிகள் அகலமாகி வருகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் ,பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுத்து பழைய பாலத்தில் ஏற்பட்டுள்ள குழிகளை அடைத்து சீரமைத்து வாகனப் போக்குவரத்துகள் தங்கு தடையின்றி விபத்து ஏற்படாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×