search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவாஜி சிலை"

    • பொதுமக்கள் வெளியில் இருந்தே பார்க்கும் வகையில் மண்டபத்தின் உள்பகுதியிலேயே சாலையை பார்க்கும் வகையில் சிவாஜியின் கம்பீரமான சிலை இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
    • சிலை திறப்பு விழா சிவாஜி பிறந்த நாளான நாளை (அக்டோபர் 1-ந்தேதி) நடைபெறுகிறது.

    சென்னை:

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2006-ம் ஆண்டு மெரினா கடற்கரையில் ஆள் உயர வெண்கல சிலை நிறுவப்பட்டது. காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் காந்தி சிலை அமைந்துள்ள பகுதியில் சாலையின் நடுவே சிலை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெரினா கடற்கரை பகுதியில் இருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்டது.

    அப்போதிருந்த அ.தி.மு.க. அரசு சிவாஜி கணேசனுக்கு அடையாறில் மணிமண்டபம் கட்டியது. இந்த மணிமண்டபத்தில் வெண்கல சிலையை நிறுவினார்கள். மணிமண்டபத்தில் சிவாஜியின் அரிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. மணிமண்டபத்தின் நடுவே சிலையை அமைத்திருந்தனர். வெளியில் இருந்து பார்த்தால் தெரியாத வகையில் சிலை இருந்தது.

    இந்த நிலையில் சிவாஜி சிலையை மணிமண்டபத்தில் இடம் மாற்றி வைத்துள்ளனர். பொதுமக்கள் வெளியில் இருந்தே பார்க்கும் வகையில் மண்டபத்தின் உள்பகுதியிலேயே சாலையை பார்க்கும் வகையில் சிவாஜியின் கம்பீரமான சிலை இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா சிவாஜி பிறந்த நாளான நாளை (அக்டோபர் 1-ந்தேதி) நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    ×