search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலம்பப்போட்டி"

    • நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் 10-ந்தேதி நடக்கிறது
    • திரைப்பட இயக்குனர் சமுத்திரகனி பங்கேற்கிறார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கணேசபுரத்தில் உள்ள லெமூரியா வர்மக் களரி அடிமுறை உலக கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான வீரர்கள் பங்கேற்கும் அடிமுறை-சிலம்பப்போட்டிகள் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

    காலை 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் தமி ழ்நாடு முழுவதும் இருந்து அடிமுறை களரி, சிலம்பம் போட்டியில் தேர்ச்சி பெற்ற 2000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். ஆயுத வீச்சு உள்ளிட்ட போட்டிகளும் நடைபெறுகின்றன. மேலும் 300-க்கும் மேற்பட்ட வர்மக்கலை ஆசான்கள், 1000 பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு அன்று மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன..இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரகனி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பி.டி.செல்வகுமார், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ஆடிட்டர் ஜான் மோரிஸ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் திருமலை தமிழரசன், அங்கையற்கன்னி, சுஷ்ருசா ஆஸ்பத்திரி டாக்டர்கள் பானுமதி, பத்ரிநாத் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை லெமூரியா வர்மக்களரி அடிமுறை கூட்டமைப்பு நிறுவனர் செல்வன், துணை நிறுவனர் ஆனந்த், ராஜா, முதன்மை செயல் அலுவலர் வைகுண்டராஜா மற்றும் ஊழியர்கள், வீரர்கள் செய்து வருகிறார்கள்.

    • நாகர்கோவில் லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலக கூட்டமைப்பு சார்பில் நடந்தது.
    • 3 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலக கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான அடிமுறை, களரி, சிலம்பப்போட்டி குமரி மாவட்டத்தில் நடந்தது. இந்த போட்டியில் 196 பிரிவுகளில் 3 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அருகில் லெமூரியா வர்மக்களரி அமைப்பு நிர்வாகிகள் உள்ளனர்.

    ×