search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்ன வெங்காயம் விலை உயர்வு"

    • கடந்த ஒரு வருட காலமாக சின்ன வெங்கா யத்தின் விலை கடுமையாக சரிவடைந்து கிலோ ரூ.20-க்கும் கீழே கொள்முதல் செய்யப்பட்டது.
    • ஒரு நாளைக்கு 50 கிலோ விதம் வெங்காயம் தாள்களை நீக்கி சுத்தம் செய்கின்றனர்.

      தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் அதகபாடி, இண்டூர், சோம்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம் உள்ளூர் வியா பாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்காக சேலம், திண்டுக்கல், திருச்சி, கோவை, பொள்ளாச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வடமாநி லங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்ததால் கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் சின்ன வெங்காயத்தின் சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரித்தது.

    இதன் காரணமாக உற்பத்தியும் பலமடங்கு அதிகரித்தது. இதனால் கடந்த சுமார் ஒரு வருட காலமாக சின்ன வெங்கா யத்தின் விலை கடுமையாக சரிவடைந்து கிலோ ரூ.20-க்கும் கீழே கொள்முதல் செய்யப்பட்டது.

    முதல் தரமான வெங்காயம் கிலோ ரூ.20-க்கும் 2 மற்றும் 3-ம் தர வெங்காயம் கிலோ ரூ.15, ரூ.10 என்ற விலையில் கொள்முதல் செய்ய ப்பட்டது.

    இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு செய்து விளைவித்த வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு கேட்பாறின்றி கிடந்து அழுகிப் போனது.

    இதனால் பல இடங்களில் அறுவடையே செய்யாமல் ஊழுது விட்டனர். எப்போது விலை உயரும் எனத் தெரியாமல் தவித்த விவசாயிகள் லட்சக்கண க்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்தனர்.

    ஏராளமான விவசாயி களின் வாழ்வில் ஒளி யேற்றிய வெங்காயம் கடந்த சில மாதங்கலாக விவசா யிகளுக்கு ஏமாற்றத்தை தந்தது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    தற்போதைய நிலவர ப்படி முதல் தர சின்ன வெங்காயம் ரூ.80 வரை யிலும் 2 மற்றும் 3-ம் தர வெங்காயம் முறையே ரூ.65,60-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இன்று தருமபுரி உழவர் சந்தையில் 68 முதல் 70 வரை சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளி மார்க்கெட்டில் 100 வரை விற்பனை செய்யப்படு கிறது.

    இது பற்றி தருமபுரி அடுத்த செக்கோடி வெங்காய வியாபாரி கூறுகையில் தருமபுரி மாவட்டத்தில் விளைச்சல் குறைந்துள்ளதால் வெங்காய விளையும் உயர்ந்து வருகிறது.

    மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வெங்காயம் வரத்து இல்லாததால் திருச்சி போன்ற பகுதிகளில் வெங்காய விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு தருமபுரியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    50 கிலோ கொண்ட மூட்டையை பயிருடன் சேர்த்து தினமும் கொள் முதல் செய்யப்படுகிறது.

    கொள்முதல் செய்த வெங்காயத்தினை வெங்காயத் தாள்களை நீக்கி சுத்தம் செய்வதற்காக வீடுகளில் பொழுதை கழிக்க வழி இன்றி தவிக்கும் முதி யோர்களுக்கு 3.50 ரூபாய்க்கு கூலி கொடுத்து வேலை கொடுக்கப்படுகிறது.

    ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 50 கிலோ விதம் வெங்காயம் தாள்களை நீக்கி சுத்தம் செய்கின்றனர்.

    பின்னர் விதை முதல் வீட்டு உபயோகம் வரை கிலோ 60 முதல் 80 ரூபாய்க்கு மூட்டையாக மார்க்கெ ட்டுக்கு கொடுக்கப்படுகிறது.

    மேலும் வெங்காயத்தின் வரத்து குறைந்து வருவதால் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது.

    அடுத்த சில வாரங்களில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய வகையில் விலையேற்றம் இருக்கும் என்றனர்.

    ×