search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி"

    • சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி தலைமையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    • சுற்றுப்பயணத்தின் போது பெண்கள் இளைஞர்கள் எழுச்சியுடன் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    பரமக்குடி

    மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாநில நிர்வாகி சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி தலைமை–யில் என் மண், என் மக்கள் நடைபயணமாக பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகு–திக்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வெடி வெடித்து, மேல தாளம் முழங்க, மாலை, சால்வை அணி–வித்து கும்ப மரியாதை–யுடன் வரவேற்பு அளிக்கப் பட்டது.

    பின்னர் வோந்தோனி ரோட்டில் அமைக்கப்பட்டி–ருந்த பாரதிய ஜனதா கட்சி கொடியை மாநிலத் தலை–வர் அண்ணாமலை ஏற்றி வைத்தார். பின்னர் ராஜாஸ் சேதுபதி தலைமையில் மாற்று கட்சியில் இருந்து விலகி 3,000 பேர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா–மலை முன்னிலையில் தங் களை இணைத்துக் கொண்ட–னர்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் மத்திய அரசின் 9 ஆண்டு–கால சாதனைகளை நேரடி–யாக தமிழ க மக்களின் மனதை கவரும் வகையில் தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவ–தும் நகர் பகுதிகளில் நடந்து சுமார் 1,700 கிலோ மீட்டர் தூரமும் மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்து மூலம் சுமார் 900 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல் கிறார்.

    ஐந்து கட்டங்களாக 168 நாட்களில் 236 தொகுதிக–ளுக்கும் செல்லும் வகையில் யாத்திரை தொடங்கி நடை–பெற்று வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணத்தின் போது பெண்கள் இளைஞர்கள் எழுச்சியுடன் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    ×