search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகர் கவாச் ஒத்திகை"

    • இதையடுத்து 8 போலீசாரையும், ஒரு கப்பல் படை வீரரையும் போலீசார் பிடித்தனர்
    • விசாரணையில் அவர்கள் மாறுவேடத்தில் வந்த கமாண்டோ படை போலீசார் என்பது தெரியவந்தது.

    நாகர்கோவில் :

    கடல் வழியாக தீவிரவாதி கள் மும்பையில் தாக்குதல் நடத்தியதையடுத்து கட லோர பாதுகாப்பு குழும போலீசார் கடல்பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவ்வப் போது சீ விஜில், சஜாக், அம்லா, சாகர் கவாச் என பல்வேறு பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் நாளை மாலை 7 மணி வரை "சாகர் கவாச்" என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்று காலை சின்ன முட்டம் மீன்பிடி துறை முகத்திலிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். கட லோர காவல்படை இன்ஸ் பெக்டர் நவீன் தலைமை யிலான போலீசார் சின்ன முட்டம் துறைமுகத்தில் இருந்து 8 நாட்டிங்கல் தொலைவில் ரோந்து பணி சென்றபோது சந்தேகப் படும்படியாக படகு ஒன்று நடுக்கடலில் நின்று கொண் டிருந்தது. போலீசார் அந்த படகை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது படகில் இருந்தவர்கள் மீனவர்கள் என்று தெரிவித்தனர்.

    உடனே கடலோர பாது காப்பு குழும போலீசார் அவர்களது அடையாள அட்டையை காண்பிக்குமாறு தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் மீனவர் களுக்கான அடையாள அட்டை எதுவும் இல்லை. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் மாறுவேடத்தில் வந்த கமாண்டோ படை போலீசார் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 8 போலீசாரையும், ஒரு கப்பல் படை வீரரையும் போலீசார் பிடித்தனர். பிடிபட்ட 8 பேரையும் கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டு வருகிறார் கள். குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் கட லோர காவல் படை போலீ சார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    • சென்னை முதல் குமரி வரை உள்ள 14 கடலோர மாவட்டங்களிலும் ஒத்திகை நடைபெறுவதால் கடலோர பகுதிகள் இன்று பரபரப்பாக காணப்பட்டன.
    • கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதே ஒத்திகையின் நோக்கமாகும்.

    சென்னை:

    மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பின்னர் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் 2 முறை 'சாகர் கவாச் ஒத்திகை' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டின் முதல் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

    கடலோர பாதுகாப்பு படையினர், கடற்படையினர், மாநில காவல் துறையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகிறார்கள். சென்னை முதல் குமரி வரை உள்ள 14 கடலோர மாவட்டங்களிலும் ஒத்திகை நடைபெறுவதால் கடலோர பகுதிகள் இன்று காலையில் பரபரப்பாக காணப்பட்டன.

    பயங்கரவாதிகள் போன்று மாறுவேடத்தில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ஊடுருவுவார்கள் அவர்களை மாநில போலீசார் மடக்கி பிடிப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் பாதுகாப்பு ஒத்திகையில் கோட்டைவிடும் போலீசார் மீது நடவடிக்கை பாயும். கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த ஒத்திகையின் நோக்கமாகும்.

    சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருவொற்றியூர், எண்ணூர், கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய கடல் பகுதிகள் போன்றவற்றிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    சென்னை மாநகரையொட்டிய கடல் பகுதிகளில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி மற்றும் அதிகாரிகள் ஒத்திகையை நடத்தி வருகிறார்கள். இன்று தொடங்கி இருக்கும் இந்த ஒத்திகை 2 நாட்கள் நடத்தப்படுகிறது.

    ×