search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச விருது"

    • நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு 122 நாடுகளைச் சேர்ந்த 3,851 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 50 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • 50 இறுதிப்போட்டியாளர்களில் தமிழக மாணவி உள்பட இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    உலக அளவில் கற்றல் மூலமாக சமூகத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ள தலைசிறந்த மாணவர் ஒருவரை தேர்வு செய்து ரூ.82 லட்சம் பரிசுத்தொகையுடன் கூடிய இந்த விருதை பிரிட்டனைச் சேர்ந்த செக்.ஓ.ஆர்ஜி. அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

    நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு 122 நாடுகளைச் சேர்ந்த 3,851 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 50 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 50 மாணவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும்.

    இந்த 50 இறுதிப்போட்டியாளர்களில் தமிழக மாணவி உள்பட இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். திருவண்ணாமலை எஸ்.கே.பி. வனிதா சர்வதேச பள்ளி மாணவி வினிஷா உமா சங்கர் (16), பஞ்சாப் மாநிலம் லூதியானா சத்பால் மிட்டல் பள்ளி மாணவி நம்யா ஜோஷி (16), குஜராத் மாநிலம் காந்தி நகர் குஜராத் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்க மருத்துவக் கல்லூரி மாணவர் கிளாட்சன் வகேலா (25), ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ஸ்ரீ பதம்பத் சிங்கானியா பள்ளி மாணவர் பத்மாக்ஷ் கண்டேல்வால் (17), பஞ்சாப் மாநிலம் மொகாலி சண்டீகர் பொறியியல் கல்லூரி மாணவர் ரவீந்தர் பிஷ்னோய் (20, ஆகியோர் இறுதிப்போட்டியாளர்களாக இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

    தனது 12-வது வயது முதல் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி வரும் தமிழக மாணவியான வினிஷா உமாசங்கர் சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டி, மின்சாரத்தை வெகுவாக மிச்சப்படுத்தும் ஸ்மார்ட் மின்விசிறி உள்ளிட்டவைகளை கண்டு பிடித்துள்ளார். பல அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் பங்கேற்று சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகளை பெற்றுள்ளார். தேர்வு செய்யப்பட்டுள்ள 50 பேரில் இருந்து 10 இறுதிப் போட்டியாளர்கள் அடுத்த மாதம் தேர்வு செய்யப்படுவர். இந்த 10 பேரில் இருந்து இறுதி வெற்றியாளர் ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்படுவார்.

    ×