search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு ரெயில் மோதல்"

    • ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து நண்பர்கள் 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்துள்ளனர்.
    • சரக்கு ரெயில் மோதி பலியான ச.மாரிமுத்து மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி தளவாய்புரத்தை சேர்ந்தவர் ஜெபசிங் (வயது27). இவரது நண்பர்கள் தூத்துக்குடி

    மாவட்டம் திரு.வி.க. நகரை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மாரிமுத்து (23), தூத்துக்குடி 3-வது மைல் பசும்பொன்நகரைச் சேர்ந்த காளிபாண்டியன் மகன் மாரிமுத்து (20). இவர்கள் 3 பேரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்நிலையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக நேற்று ஜெபசிங், ச.மாரிமுத்து, கா.மாரிமுத்து ஆகியோர் தூத்துக்குடி பி அன்ட் டி காலனிக்கு சென்றனர்.

    பின்னர் நள்ளிரவில் 3-வது மைல் பாலத்தின் கீழே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து நண்பர்கள் 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்துள்ளனர். அதில் அவர்களுக்கு போதை அதிகமானதால் அங்கேயே படுத்து தூங்கிவிட்டனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நூல்வித் ரெயில் நிலையத்திற்கு ஒரு சரக்கு ரெயில் புறப்பட்டது.

    இந்த ரெயில் 3-வது மைல் அருகே வந்தபோது தண்டவாளத்தில் படுத்து கிடந்த ச.மாரிமுத்து, கா.மாரிமுத்து ஆகியோர் மீது ஏறி இறங்கியது.

    இதில் கா.மாரிமுத்துவின் தலை துண்டிக்கப்பட்டும், ச.மாரிமுத்து படுகாயம் அடைந்தும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பலத்த காயம் அடைந்த ஜெபசிங் அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தெருவிற்கு சென்று அங்குள்ள நண்பர்கள் உதவியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பலியான ச.மாரிமுத்து மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    சரக்கு ரெயில் மோதி பலியான ச.மாரிமுத்து மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாநகர போலீசாரின் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருந்த இவர் குண்டர் சட்டத்தில் கைதாகி இருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் வெளியே வந்துள்ளார்.

    இதேபோல கா.மாரிமுத்து மீது வழக்குகள் உள்ளதாகவும், அவரும் கடந்த ஒரு மாதத்திற்கும் முன்பு தான் ஜாமீனில் வெளி வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    ×