search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பகுளம் சானல்"

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
    • பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையிலிருந்து வருகின்ற தண்ணீ ரானது அனந்தனார் கால் வாய் வழியாக சம்பகுளத்திற்கு வருகிறது.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி யிருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட ராஜாக்கமங்கலம் ஒன்றியம் சூரங்குடி பகுதி யில் சம்பகுளம் உள் ளது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணை யிலிருந்து வருகின்ற தண்ணீ ரானது அனந்தனார் கால் வாய் வழியாக சம்பகுளத்திற்கு வருகிறது.

    இக்குளத்திலிருந்து திறந்து விடப்படுகின்ற தண்ணீரானது சம்பகுளம் சானல் வழியாக சுற்று வட்டாரப் பகுதிகளான ஈத்தாமொழி, புதூர், மேல கிருஷ்ணன் புதூர், நைனாபுதூர், புத்தளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன டைந்து வருகின்றன. மேலும் இச்சானலின் மூலம் வருகின்ற தண்ணீரினால் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரின் உப்புதன்மை குறைந்து காணப்பட்டது.

    இந்நிலையில் அனந்த னார் கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டி ருக்கின்ற நிலை யில் சம்பகுளம் முழு கொள்ளவை எட்டிய நிலை யிலும், கடந்த 1 மாத கால மாக சம்பகுளம் சானலில் அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடுவதை காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் இச்சானலின் வருகின்ற தண்ணீர் மூலம் பயனடைந்து வந்த நெற் பயிர் மற்றும் தென்னை விவசாயம் செய்த விவசாயி கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகி யுள்ளனர். மேலும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரின் உப்புதன்மையும் அதிக ரித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகின்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

    எனவே விவசாயிகளின் நலன் கருதியும் பொது மக்களின் குடிநீர் தட்டுப் பாட்டை போக்கும் விதத்தி லும் முழு கொள்ளளவை எட்டியுள்ள சம்ப குளத்திலிருந்து, சம்பகுளம் சானல் வழியாக உடனே தண்ணீர் திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×