search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரசேகர் ராவ்"

    தெலுங்கானா சட்டசபையை கலைத்த பின்னர் தானாகவே உத்தேச தேர்தல் தேதியை அறிவித்த முதல்வருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. #TelanganaPolls #ChandrashekharRao
    புதுடெல்லி :

    தெலுங்கானா மாநில மந்திரிசபையின் சிபாரிசை ஏற்று, அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. அதனால், அங்கு இந்த ஆண்டுக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தெலுங்கானா சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரையை சமர்பித்த பின்னர் முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசுகையில் நவம்பர் மாதம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார். இதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    மேலும் சந்திரசேகர் ராவ் மற்றும் மாநில அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரி பேசியதாக வெளியாகிய தகவலை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் மறுத்துள்ளார். தெலுங்கானாவிற்கு தேர்தல் ஆணைய குழு 11-ம் தேதி செல்கிறது, அப்போது அங்குள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.
     
    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இப்போதே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஐதராபாத் நகருக்கு துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான அதிகாரிகள் குழுவை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன்  அனுப்பி வைக்கிறது.

    அங்குள்ள நிலைமைகளை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் இதுதொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் கமிஷனரிடம் சமர்ப்பிப்பார்கள் என அதன் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #TelanganaPolls #ChandrashekharRao
    ×