search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தன மரங்கள் கடத்தல்"

    • தனசேகரன் நிலத்தின் வரப்பு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன.
    • பக்கத்து நிலத்தில் இருந்த சந்தன மரங்களில் 80-க்கும் மேற்பட்டவை வெட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    பெரிய குளம்:

    தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். விவசாயி. இவரது நிலத்தின் வரப்பு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன. அதோடு அந்த நிலத்தின் அருகில் மற்றொரு நபரின் நிலத்திலும் ஏராளமான மேற்பட்ட சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.

    தனசேகரன் டெல்லியில் மத்திய அரசு பணியில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்று விட்டு 20 நாட்கள் கழித்து வந்தார். அப்போது அவருடைய பட்டா நிலத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான 6 சந்தன மரங்கள் மற்றும் இரண்டு தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தேனி வனச்சரக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளும் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறிச்சென்று இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனிடையே இவருடைய பக்கத்து நிலத்தில் இருந்த சந்தன மரங்களில் 80-க்கும் மேற்பட்டவை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

    மேலும் இதுகுறித்து நில உரிமையாளர் தனசேகரன் கூறுகையில் பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரம் மற்றும் தேக்கு மரங்கள் மாவட்ட கலெக்டர், மாவட்ட வன அலுவலர், வருவாய் துறை அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்பு மரங்கள் வெட்டப்படும் என்ற நிலை இருக்கும் பொழுது, அனுமதி இல்லாமல் 15 முதல் 20 ஆண்டுகள் வளர்க்கப்பட்ட சந்தன மரங்கள் எப்படி வெட்டப்பட்டது என்றும், வெட்டப்பட்ட மரங்களின் அடிப்பாகம் முதல் நடுப்பாகம் வரை காணாமல் போய் உள்ள நிலையில் மேல் பாகங்கள் மட்டும் அப்பகுதியில் உள்ள வேலியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

    சந்தன மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் 25 ஆண்டுகள் கழித்து வெட்டினால் அதன் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் செல்லும் நிலையில் 70% வளர்ச்சி அடைந்துள்ள சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாகவும், வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார்.

    மேலும் இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் கேட்டபோது சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×