search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை"

    • வினய்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவது சிரவாணிக்கு தெரியவந்தது.
    • திருமணம் குறித்து சிரவாணி வினய்குமாரிடம் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சிரவாணி (வயது 22). இவர் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    அதே கல்லூரியில் வினய் குமார் (30) என்பவர் 4-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு சென்று வரும்போது சிரவாணிக்கும் வினய்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர். காதலனை திருமணம் செய்வது குறித்து சிரவாணி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் சிரவாணியின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களின் எதிர்ப்பை மீறி கடந்த ஜூன் மாதம் வினய் குமாரை திருமணம் செய்து கொண்டு விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் வினய்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவது சிரவாணிக்கு தெரியவந்தது. இதுகுறித்து சிரவாணி வினய்குமாரிடம் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி உன்னை நம்பி காதலித்து திருமணம் செய்த என்னை ஏமாற்றி விட்டாயே என வினய்குமாரிடம் சண்டை போட்டார்.

    முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த வினய் குமார் மீது நடவடிக்கை எடுக்ககோரி விசாகப்பட்டினம் போலீசில் சிரவாணி புகார் செய்தார்.

    அப்போது போலீசார் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதால் இருவரும் சேர்ந்து வாழ வேண்டுமென போலீஸ் நிலையத்தில் நேற்று கவுன்சிலிங் கொடுத்தனர்.

    புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் கவுன்சிலிங் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த சிரவாணி போலீஸ் நிலையத்திற்கு வெளியே வந்து தான் ஏற்கனவே கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

    தீ உடல் முழுவதும் பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் சிரவாணி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே ஓடி வந்த போலீசார் சிரவாணியை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது போலீசாருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

    சிரவாணியை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சிரவாணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வினய் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×