search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேடயம் பரிசு"

    • கல்வி நிறுவனங்களின் தலைவர் நாஞ்சில் வின்சென்ட் வழங்கினார்
    • மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தேசிய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்துவதற்கு தகுதியான 200 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற தகுதியான போட்டி யாளர்களை குமரி மாவட்ட அளவில் தேர்வு செய்யும் தகுதி சுற்று நடைபெற்றது.

    கன்னியாகுமரி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றனர். இப்போட்டிகளில் குமரி மாவட்ட அளவில் 102 பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 240க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வின்ஸ் பள்ளி மாணவர்கள் ரிஷிக், ஹாட்ரியல் வின்சென்ட் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் செயலாளர் குமார் ஜேசுராஜன், தலைவர் ஜான், பொருளாளர் நவீன், பால்பின், ஷீலன், பிபின், அனீஸ், சஜின் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    ×