search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே என் நேரு"

    • வார்டு மறுவரையறை செய்யும்பொழுது 110 நாட்கள் அவகாசம் கொடுத்து பொதுமக்கள் கருத்து கேட்க வேண்டும்.
    • இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த பணிகள் நடைபெறும் என்றும் அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்தார்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு 2017-ம் ஆண்டு கடந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக வார்டு மறுவரையறை செய்து அரசாணை வெளியிட்டு, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளித்துவிட்டார்கள் என்றும், இதற்கு பின் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்போது வார்டு மறுவரையறை செய்வதற்காக முயற்சி மேற்கொண்டது, அப்போது போதிய கால அவகாசம் இல்லாததால் மறுவரையறை செய்ய முடியவில்லை என கூறினார்.

    வார்டு மறுவரையறை செய்யும்பொழுது 110 நாட்கள் அவகாசம் கொடுத்து பொதுமக்கள் கருத்து கேட்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டிய காலத்திற்குள் இவையெல்லாம் செய்ய முடியாது என்பதால் வார்டு மறுவரையறை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும், எனவே, தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டு மறுவரையறை செய்வதற்கு முதலமைச்சரிடம் அனுமதி பெற்று குழு அமைக்க இருப்பதாகவும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த பணிகள் நடைபெறும் என்றும் அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும் என கூறிய அவர், அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அரசு அமைத்து இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    ×