search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலிப்படை கைது"

    • முத்துகிருஷ்ணனை அரிவாளால் வெட்டிய நபர்களை பழி வாங்குவதற்காக 15 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • கணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை பழிதீர்க்க முடிவு செய்ததாக அனுசியா கூறினார்.

    மதுரை:

    மதுரை கரிமேடு மோதிலால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்து கிருஷ்ணன் (எ) கலை (வயது23). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

    இதில் ஏற்பட்ட மோதலால் முத்துகிருஷ்ணனுக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முரட்டன் பத்திரியை சேர்ந்த கட்டாரி கார்த்திக் (24), வினீத்குமார் (22), அபிலாஷ் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இந்த நிலையில் முத்துகிருஷ்ணனை அரிவாளால் வெட்டிய நபர்களை பழி வாங்குவதற்காக 15 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்படி தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் ஆலோசனையில் திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் 15 பேர் கொண்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் கரிமேடு பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

    தொடர் விசாரணையில் வைகை தென்கரையில் உள்ள சலவையாளர் காலனி அருகில் பாழடைந்த கட்டிடத்தில் அந்த கும்பல் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பதுங்கி இருந்த பெண் உள்பட 11 பேரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 11 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணை நடத்தியதில் அவர்கள் வெங்கடேஷ் (23), பாண்டியராஜன் (22), விஜய் (24), ராம்குமார் (எ) கருவாயன் (18), முத்துமணி (24), பிரவீன் (27), முத்துக்குமார் (எ) இட்லி (22), கவுதம் (22), ஆண்டி (எ) ரவி (21), மாயகிருஷ்ணன் (22) மற்றும் அரிவாளால் வெட்டப்பட்ட முத்துகிருஷ்ணனின் மனைவி அனுசியா என்பது தெரிய வந்தது.

    எனது கணவரை கட்டாரி கார்த்திக் மற்றும் அவரது கும்பல் கொலை செய்யும் நோக்கத்தில் வீடு புகுந்து வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த எனது கணவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனது கணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை பழிதீர்க்க முடிவு செய்தேன்.

    இதற்கு எனது சகோதரர் பாண்டியராஜன் உறுதுணையாக இருந்தார். அவரது உதவியுடன் 9 பேர் கொண்ட கூலிப்படையை திரட்டினோம். பின்னர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி கொண்டு சதிதிட்டம் தீட்டினோம். பழிதீர்க்கும் சம்பவத்திற்கு அதிக அளவில் பணம் தேவைப்பட்டது. எனவே வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டோம். அதற்குள் போலீசார் எங்களை கைது செய்தனர்.

    இவ்வாறு அனுசியா தெரிவித்துள்ளார்.

    ×