search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளுகுளு சீசன்"

    • குழித்துறையில் 12.4 மில்லி மீட்டர் மழை
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 22.30 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரியில் கடந்த 3 நாட்க ளாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது. குழித்துறை பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது.

    அங்கு அதிகபட்சமாக 12.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், நாகர்கோவில், சுருளோடு, இரணியல், ஆரல்வாய்மொழி பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    அருவியில் மித மான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை பெய்து வருவதையடுத்து அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணைகளில் இருந்து பாசனத்திற்காக 934 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தோவாளை சானல், அனந்தனார் சானல், நாஞ்சில்நாடு,புத்தனார் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்துவிடப்பட்டுள்ளது.

    பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 31.25 அடியாக உள்ளது. அணைக்கு 452 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 684 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 22.30 அடியாக உள்ளது. அணைக்கு 248 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசனில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தற்போது சீசன் முடிந்த நிலையில் தென்மேற்கு பருவமழை ெதாடங்கியதால் சாரல்மழை பெய்து இதமான தட்பவெப்பம் நிலவி வருகிறது.

    இந்த சீதோஷ்ணத்தை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான தூண்பாறை, கோக்கர்ஸ்வாக், பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர்பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ேராஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். தொடர் மழையால் ஆங்காங்கே புதிய அருவிகள் உருவாகி சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த ஓட்டல் உரிமையாளர்கள், சிறுவியாபாரிகள் தற்போது தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×