search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றாலம் சீசன்"

    • அணைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து மிதமான தண்ணீர் விழுந்து வருகிறது.
    • செங்கோட்டை ரெயில் நிலைய 1,2 பிளாட்பாரங்களில் போடப்பட்டுள்ள கிரானைட் தளம் வழு வழுப்பாக உள்ளது. இதனால் பயணிகள் வழுக்கி விழுந்து வருகின்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகள் மற்றும் அணைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து மிதமான தண்ணீர் விழுந்து வருகிறது.

    குற்றாலம் சீசன்

    குற்றாலம் சீசன் தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இதனால் தென்காசி, செங்கோட்டை ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் ஏராளமானவர்கள் குவிகிறார்கள்.

    கூடுதல் கவுண்டர்

    எனவே குற்றாலம் சீசன் காலம் முடியும் வரை செங்கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் நலன்கருதி சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறக்க வேண்டும் என பொதுமக்களும், ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

    குற்றாலம் சீசனையொட்டி கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ், செங்கோட்டை -சென்னை சிலம்பு எக்ஸ் பிரஸ், செங்கோட்டை- சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மூலம் ஏராளமான பயணிகள் செங்கோட்டைக்கு வந்துசெல்கிறார்கள்.

    அறிவிப்பு

    இதனால் டிக்கட் கவுண்டர்களில் அதிகமான கூட்டம் காணப்படுகிறது. எனவே மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் குற்றால சீசனை கருதி செங்கோட்டை ரெயில் நிலையத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு டிக்கட் கவுண்டர்கள் திறக்க வேண்டும்.

    செங்கோட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்களின் வருகை- புறப்பாடுகளை அறிவிக்கும் ஒலிபெருக்கிகள் பழுதாகி உள்ளது. அதனை சீரமைத்து செயல்படுத்த வேண்டும்.

    பயணிகள் பாதிப்பு

    முதல் பிளாட்பாரத்தில் நிற்கும் கொல்லம், மதுரை, நெல்லை ரெயில்களில் பயணிக்கும் பயணிகள் ரெயில் மாறி ஏறிவிட்டு பின்னர் விபரம் அறிந்ததும் அவசரமாக இறங்கி மாற்று ரெயிலில் செல்கிறார்கள். செங்கோட்டை ரெயில் நிலைய 1,2 பிளாட்பாரங்களில் போடப்பட்டுள்ள கிரானைட் தளம் வழு வழுப்பாக உள்ளது.

    இதனால் பயணிகள் வழுக்கி விழுந்து வருகின்றனர். வழுக்கும் தன்மையுடைய கிரானைட் தளங்களுக்கு பதிலாக சொர சொரப்பான தளங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×