search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்கூட்டத்தில் விவசாயிகள் பரபரப்பு புகார்"

    • கூட்டத்தில் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் தாங்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தின் எண்களை பதிவு செய்து கொண்டு வண்டல் மண் எடுத்து பயன்பெறலாம்.
    • துறை அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பதிவு செய்ய இருப்பதால் விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.

    தேனி:

    ஆண்டிபட்டி அருகே வைகை அணை, அரசு தென்னை நாற்று பண்ணையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டம் தொடங்குவதற்கு முன்பு வைகை அணை, அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் தேனி மாவட்ட த்தல் விவசாயி களுக்கு தென்னையில் ஏற்படும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து முன்னேற்பாடாக தோட்டக்கலைக் கல்லூரி பேராசிரியர்கள் எடுத்துரை த்தனர்.

    கூட்டத்தில் தேனி மாவட்டத்திற்கு உழவு மானியம் கிடைக்க வழிவகை செய்திடவும், தேங்காய்க்கு உலர்களம் மற்றும் மா விவசாயிகளுக்கு சிப்பம் கட்டும் அறை அமைத்திடவும், கெங்குவார்பட்டியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்திடவும், மேகமலை விவசாயிகளுக்கு பட்டா வழங்கிடவும், பெரியகுளம் சோத்து ப்பாறை அணையில் மீன் வளர்ப்பு செய்திடவும், குன்னூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெற ராஜவாய்க்காலில் தடுப்பணை அமைத்து தரவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரம் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும், விவசாயிகளுக்கு தேவை யான உரம் இருப்பு வைத்திட வும், செங்குளத்துப்பட்டி பகுதியில் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட செயல்படாமல் இருக்கும் தொகுப்பு இயந்திரங்களை மாவட்ட தொழில் மையம் மூலம் சரி செய்திடவும்,

    மேலும் ஆண்டிபட்டி பகுதியில் காளவாசல் மற்றும் கனிம வளங்கள் அதிகளவில் எடுக்கப்படுவ தால் விவசாய நிலம் மற்றும் விளை பொருட்கள் உற்பத்தி குறைவதால் இதனை தடுத்திட புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், முருக மலை பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்ல தார்சாலை மற்றும் விவசாய நிலங்களில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலை மாற்றி அமைத்துதரவும், குப்பைகளை விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் கொட்டுவதினை தடுத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள வும், ஆண்டிபட்டி கோழி க்காரன் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றி வரைபடத்துடன் புலத்தணிக்கை அறிக்கை வழங்கிட வேண்டும்.

    மேலும் கண்டமனூர், புதுக்குளம் தூர்வார வேண்டும், பஞ்சாயத்து கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதினை தடுத்திடவும், ஆண்டிபட்டி பகுதியில் வறட்சி அதிகமாக இருப்ப தால் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரவும், தடுப்பணை அமைத்து தரவும் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முருங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையை 6 மாதத்திலிருந்து 1 வருடமாக உயர்த்தி டவும், வெடி வைத்து கனிம வளங்கள் எடுக்கப்படுவதால் போர்வெல் பாதிப்படைவ தாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும் இதனை கனிம வளத்துறை அலுவ லர்கள் ஆய்வு செய்து தடுத்திடவும், மொட்ட னூத்து, மயிலாடும்பாறை ஆகிய பகுதிகளில் கண்மா ய்கள் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவ சாயிகள் முன் வைத்தனர்.

    விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரிவிக்கு மாறு அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்த தாவது:-

    கோட்ட அளவில் விவசாயிகளுக்கு விவசாயி கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த கூட்டத்தில் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் தாங்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தின் எண்களை பதிவு செய்து கொண்டு வண்டல் மண் எடுத்து பயன்பெறலாம்.

    விவசாயிகள் தங்களின் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களை இணைய தளத்தில் இம்மாத இறுதி க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதால் துறை அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பதிவு செய்ய இருப்பதால் விவசாயிகள் இதனை பயன்படுத்தி இணையதளத்தில் பதிவு செய்து பயனடைய வேண்டும் என தெரி வித்தார்.

    ×