search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறை கேட்ட கலெக்டர்"

    • அரசு மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • வேளாண் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் அவர்களது வாழ்வாதாரம் குறித்தும், ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மற்றும் குடிமைப்பொருட்களின் தரம் குறித்தும் கலந்துரையாடினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டாரத்திற்குட்பட்ட வேப்பம்பட்டி பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், அரசு மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    வேப்பம்பட்டி பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ.4,22,500 அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள பசுமைகுடிலில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளரிக்காய் பயிர்களையும், ரூ.30,000 அரசு மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள பப்பாளி மற்றும் கொய்யா பயிர்களையும், ரூ.35,000 அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணீர் பாசனத்திட்டப் பணிகள்,

    தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.60,000 அரசு மானியத்தில் பந்தலில் பாகற்காய் பயிரிடப்பட்டுள்ள பயிர்களையும், ரூ.80,0000 அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் பாகற்காய் பயிரிடப்பட்டுள்ள பயிர்களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் நிலை, மகசூல், மற்றும் வருவாய், அவர்களது வாழ்வாதாரம் குறித்தும், ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மற்றும் குடிமைப்பொருட்களின் தரம் குறித்தும் கலந்துரையாடினார்.

    மேலும், தேனி வட்டத்திற்குட்பட்ட கோட்டூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் பணியாற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை, வருகை பதிவேடு, விடுதிகளில் மாணவர்கள் தங்கும் அறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை, மாணவர்களின் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு, விளையாட்டு உபகரணங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும் ஆய்வு செய்தார்.

    இதேபோல் பழனிசெட்டிபட்டி பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டபணிகளை பார்வையிட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ×