search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பைகளை கொட்டினால் அபராதம்"

    • நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
    • பிளாஸ்டிக்கை முழுமை யாக தடை செய்யவும், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற பணிகளை பணியாற்றவேண்டும் என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் நம்மஊரு சூப்பர் 2-ம் கட்ட விழிப்புணர்வு பிரச்சார பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணை ப்புக்குழு கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா தெரிவித்ததாவது,

    தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி தேனி மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை பற்றிய மக்கள் பங்கேற்புடன் கூடிய சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் கடந்த 2022 ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை நடைபெற்றது. இதன்மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.

    இதைதொடர்ந்து 2-ம் கட்டமாக வரும் மே 1 முதல் ஜூன் 15 வரை கிராம ஊராட்சி பகுதிகளில் நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை பற்றிய நம்ம ஊரு சூப்பரு சிறப்பு விழிப்பு ணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது. கிராமப்பகுதிகளில் இந்த சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் பொருட்டு இதை சிறப்பாக நடத்துவதற்கு நியமிக்க ப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் முறையாக தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சுயஉதவி க்குழு உறுப்பினர்கள் மூலமாக நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும். துப்புரவு மற்றும் திட, திரவ கழிவு மேலாண்மைக்காக வழங்கப்படும். அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளின் செயல்பாட்டை உறுதி செய்தல், பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பதுடன் அனைத்து இடங்களிலும் குப்பை இல்லாமலும், திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருப்பதை உறுதி செய்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமை யாக தடை செய்யவும், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற பணிகளை மாவட்ட அள விலான ஒருங்கிணை ப்புக்குழு அனைத்துத்துறை அலுவலர்கள் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    ×